Take a fresh look at your lifestyle.

பிளாஸ்டிக் போத்தல்களுக்கு வைப்புத் தொகையை அறவிட தீர்மானம்!

28

வெவ்வேறு உற்பத்திகள் அடங்கிய 750 மில்லிலீற்றர் பிளாஸ்டிக் போத்தல்களைக் கொள்வனவு செய்யும்போது நுகர்வோரிடமிருந்து 10 ரூபா வைப்புத் தொகை பெற்றுக் கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சிக்காக, சுற்றாடல் அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில்  அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் வெற்று பிளாஸ்டிக் போத்தலை மீண்டும் கையளிப்பதன் ஊடாக 10 ரூபா வைப்புத் தொகையை மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.

யோசனைக்கு அமைய சூழலுக்கு விடுவிக்கப்படும் வெற்று பிளாஸ்டிக் போத்தல்களைச் சேர்த்து வழங்கும் எந்தவொரு நபருக்கும் மேலதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் எனச் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.

750 மில்லிலீற்றர் பிளாஸ்டிக் போத்தல்கள் சுற்றாடலில் சேர்வதைத் தடுப்பதற்காகப் பொருத்தமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் உள்ளூராட்சி சபைகளிடம் பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதற்கான தொழிற்சாலைகள் இல்லை எனச் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் போத்தல் உற்பத்தி நிறுவனங்களை இணைத்து, ஒன்றிணைந்த மீள்சுழற்சி தொழிற்சாலையை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் சுற்றாடல் பாதிப்பு காரணமாக அமையும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் போன்ற சில உற்பத்திகளுக்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில உற்பத்திகளுக்கு எதிர்வரும் நாட்களில் தடை விதிப்பதற்குத் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.