Take a fresh look at your lifestyle.

அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை

25

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் ​போது எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டம் பிரதமர் தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.