Take a fresh look at your lifestyle.

பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் திறப்பு

25

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும், மொத்த விற்பனைக்காக மாத்திரம் இன்றும், நாளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மொத்த விற்பனையாளர்களும், நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு சென்று மரக்கறிகள் மற்றும் பழ வகைகளைக் கொள்வனவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகள், ஆடைத் தொழிற்சாலை, கட்டுமானத் தளங்கள், கிராமிய சந்தைகள், விவசாய மற்றும் இயற்கை உர உற்பத்தி நடவடிக்கைகள், பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் இடம்பெறும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வாராந்த சந்தைகள் திறக்கப்பட்டாலும், சுகாதார வழிமுறைகளுக்கு அமைய வாடிக்கையாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே அனுமதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.