Take a fresh look at your lifestyle.

இன்று மற்றும் நாளை வானிலையில் மாற்றம்

26
நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரண்டு நாட்களில் (ஜூன் 08ந் திகதி . 09ம் திகதி)  அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ,  வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா  கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில்  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா  கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில்  இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களம்