Take a fresh look at your lifestyle.

மாவட்ட ரீதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விபரம்

27

இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 2,976 கொவிட் தொற்றாளர்களில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இம்மாட்டத்தில் நேற்று மாத்திரம் 805 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதுடன், இதுவரையில் கம்பஹாவில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 37,488 ஆகும்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று 589 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதுடன், இதுவரையில் 53,533 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் களுத்துறையில் 300 பேருக்கும், கண்டியில் 97 பேருக்கும், குருணாகலையில் 79 பேருக்கும், காலியில் 98 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 112 பேருக்கும், கேகாலையில் 79 பேருக்கும், புத்தளத்தில் 34 பேருக்கும், அனுராதபுரத்தில் 107 பேருக்கும், மாத்தறையில் 10 பேருக்கும் அடையாளம் காணப்பட்டனர்.

பொலன்னறுவையில் 60 பேருக்கும், அம்பாறையில் 32 பேருக்கும் நுவரெலியாவில் 128 பேருக்கும், இரத்தினபுரியில் 94பேருக்கும், ஹம்பாந்தோட்டையில் 60 பேருக்கும், பதுளையில் 14 பேருக்கும், மட்டக்களப்பில் 73 பேருக்கும், மொனராகலையில் 10 பேருக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 21 பேருக்கும், முல்லைத்தீவில் 26 பேருக்கும், திருகோணமலையில் 9 பேருக்கும், மாத்தளையில் 51 பேருக்கும், வவுனியாவில் 85 பேருக்கும், மன்னாரில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய எவருக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.