Take a fresh look at your lifestyle.

பயணக் கட்டுப்பாட்டை மீறுவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை

24

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளா்கள்.

உரிய முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 24,858 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களில் பயணிப்பவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினருக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலதிகமாக இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.