Take a fresh look at your lifestyle.

கடந்த ஒரு வருடத்தில் அதிகமான விபத்து மரணங்கள் நேற்று பதிவு

42

பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபரருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இதுவரையான பயணத் தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் அதிகமானவர்கள் உயிரிழந்த சந்தர்ப்பம் இதுவென அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களில் 5 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்கலி உயிரிழந்தவர்கள் எனவும் நான்கு பேர் அதிக வேகம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சாதாரணமாக பயணத் தடை விதிக்கப்படாத நாட்களில் கூட நாளொன்றுக்கு 8 அல்லது 9 பேரே விபத்துகளில் உயிரிழப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.