Take a fresh look at your lifestyle.

கொவிட் தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!

39

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டினுள் 3,094 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து புத்தாண்டு கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் தொத்த எண்ணிக்கை 105,026 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நேற்றைய தினம் தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

மாவட்டத்தில் 828 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 170 பேர் கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பதிவாகினர்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 544 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 255 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 224 பேரும் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை, கண்டி, காலி, அம்பாறை, மட்டக்களப்பு குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தலா 100 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.