Take a fresh look at your lifestyle.

முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேர் தொடர்ந்து விளக்கமறியல்

27

மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின்க கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் காணொளி மூலம் 04 ம் திகதி உத்தரவிட்டார்.

கடந்த மே 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில், அவர் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கா தீபச் சுடர் ஏற்றி, கடலில் பூக்களைத் தூவி, அஞ்சலி செலுத்தி அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற அனுமதியினை பெற்று 3 நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் நிலையில் அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து 04ம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்காக எடுக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்துக்கு அழைத்துவர முடியாத காரணத்தினால் காணொளி மூலமாக அவர்களை எதிர்வரும் 16 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.