Take a fresh look at your lifestyle.

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

20

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, வடமேல் மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்தில் இருந்து மன்னார் காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலி ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

வளிமண்டலவியல் திணைக்களம்