Take a fresh look at your lifestyle.

உலர்ந்த மஞ்சள் மற்றும் பெரிய வெங்காயம் விதைகள் கடத்தல், 06 சந்தேக நபர்கள் கைது

23

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை உலர்ந்த மஞ்சளும் பெரிய வெங்காய விதைகள் கொண்டு வந்த 6 பேரையும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம், வட்டக்கல்லிய பகுதியில் கடற்படையினர் மேற்கொண்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டுவந்த 362 கிலோ 950 கிராம் உலர்ந்த மஞ்சளும் 571 கிலோ 400 கிராம் பெரிய வெங்காய விதைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கை கடலோர காவல்படை மற்றும் சிலாபம் பொலிஸாருடன் இணைந்து சிலாபம், வட்டக்கல்லிய பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, களப்பு வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான 02 டிங்கி படகுகளில் இருந்து இறக்கப்பட்ட 362 கிலோ 950 கிராம் உலர்ந்த மஞ்சள் கொண்ட 14 சாக்குகளும் 571 கிலோ 400 கிராம் பெரிய வெங்காயம் விதைகள் நிரப்பப்பட்ட 22 சாக்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்த நடவடிக்கைகாக பயன்படுத்தப்பட்ட 02 டிங்கி படகுகளும் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சளும், பெரிய வெங்காய விதைகள், 02 டிங்கி படகுகள், லாரி வண்டி மற்றும் 06 சந்தேக நபர்களும் சிலாபம் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.