Take a fresh look at your lifestyle.

களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் வெள்ள அபாயம்!

44

களு கங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக குறித்த ஆறுகளின் கரையிலுள்ள சில பிரதேசங்களில் சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கம்பஹா, மினுவங்கொடை, ஜா-எல, மில்லனிய, களுத்துறை, ஹொரணை, இங்கிரிய மத்துகம ஆகிய பகுதிகளில் சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.