மத்திய கிழக்கில் தங்கியிருந்த மேலும் 472 இலங்கையர்கள் இன்று அதிகாலை தாயகம் திரும்பியுள்ளனர்.
அதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 405 பேர் இன்று (11) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
அதேபோல், கட்டார் இராச்சியத்தில் இருந்து 67 பேர் இன்று அதிகாலை தாயகம் வந்தடைந்தனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.