Take a fresh look at your lifestyle.

42 பேருக்கு கொரோனா தொற்று ; தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் பூட்டு

55

நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை வீரியமான தாக்கத்தினால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.

மேலும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகளில் 42 பேருக்கு கொரோனா தொற்றுதியாகியள்ளது. இதனால் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (25) முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

இதற்கமைய அந்த நிலையத்தை மூடுவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் மற்றும் சேவையாளர்கள் உள்ளிட்டவர்களே கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுதியானவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.