Take a fresh look at your lifestyle.

அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் – பிரதமர்

32

அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், வங்கி ஊழியர்கள் சங்கம் ஒன்றின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் சவால் மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியில், அரச வங்கி முறையை வலுவாக பராமரித்தல் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இச்சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் தொடர்ந்து நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தினார்.

நிதி அமைச்சர் என்ற ரீதியில், அரச வங்கிகளில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்க்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.