Take a fresh look at your lifestyle.

புதிய எரிவாயு கொள்கலன் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

24

வீட்டு நுகர்வுக்காக தற்போதுவரை விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு கொள்கலனுக்கு பதிலாக, புதிய எரிவாயு கொள்கலன் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், நுகர்வோர் அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்களில், ஒரு நிறுவனத்தினால், இவ்வாறு புதிய சமையல் எரிவாயு கொள்கலன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விநியோகிக்கப்படும் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனுக்கு பதிலாக, 18 லீற்றர் எனக் குறிப்பிட்டு, புதிய சமையல் எரிவாயு கொள்கலன் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில்,1493 ரூபாவுக்கு வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று விற்பனை செய்யப்படுகின்றது.

இதேநேரம், 18 லீற்றர் கொள்ளளவு எனக் குறிப்பிடப்பட்டுள்ள சமையல் எரிவாயு கொள்கலன், 1393 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், கிலோகிராமுக்கு பதிலாக லீற்றர் எனக் குறிப்பிட்டு, சந்தைக்கு சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.