Take a fresh look at your lifestyle.

5 தசாப்தங்களாக நாட்டில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறுகிறது – இராதாகிருஷ்ணன்

18

1977 ஆம் ஆண்டு முதல் நாட்டில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க திணைக்களங்கள், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் சதொச போன்றவற்றில் பணியாற்றுகின்றவர்கள், அரசியல் பழிவாங்கல்களுக்கு முகங்கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.