Take a fresh look at your lifestyle.

ரகித ராஜபக்ச பிணையில் விடுதலை!

33

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்றிரவு வெலிகடை பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் 4 பேரை காயமடைய செய்த சம்பவம் தொடர்பில் அவர் இன்று வெலிகடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவ்விபத்தின் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.