Take a fresh look at your lifestyle.

வட மாகாணத்தில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

51

வட மாகாணத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அதேநேரம், யாழ்ப்பாணம் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் கண்காணிப்பு வலயத்திலிருந்து நாளை காலை முதல் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன்,யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சகல திரையரங்குகளும் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட் 19 நிலைமை மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் திரையரங்குகளுக்கு பிரவேசிக்கும் பொதுமக்கள் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று பரவலடையக்கூடும் என்பனவற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.