Take a fresh look at your lifestyle.

சினிமா பணியில் லொறிச் சாரதியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்!

80

மஹரகம பொலிஸ் பிரிவில் பிரதான வீதியில் லொறி சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோக்கத்தர் பணி இட நிறுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும், தண்டனை சட்டக்கோவையின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நபரொருவரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

குறித்த வீடியோ தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய பன்னிப்பிட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் இன்று (29) திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

மஹரகம பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தாக்கியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. லொறி சாரதி ஒருவரே குறித்த பொலிஸ் உத்தியோகத்தரினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த லொறி சாரதி மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை விபத்திற்குள்ளாக்கியவராவார்.

எவ்வாறிருப்பினும் குறித்த சாரதி தவறிழைத்திருந்தாலும் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றமையை இலங்கை பொலிஸ் அனுமதிக்காது. எனவே அது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.