Take a fresh look at your lifestyle.

யானை – மனித மோதலை தவிர்ப்பதற்காக 49 கோடி ரூபா செலவு

56
யானை – மனித மோதலை தவிர்ப்பதற்காக 2019 முதல் 2020 வரையான காலப்பகுதியில், 49 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அரச கணக்குகள் பற்றிய குழுவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறாக 49 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளபோதும், யானை – மனித மோதல் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என்பது இந்தக் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு, யானை பாதுகாப்பு வேலியை அமைப்பதற்காக, 27 கோடியே 4 இலட்சத்து 47 ஆயிரத்து 639 ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன், 2020 ஆம் ஆண்டு அந்தப் பணிகளுக்காக 22 கோடி ரூபாவுக்கும் அதிகளவான நிதி செலவிடப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் அமைக்கப்பட்ட யானை பாதுகாப்பு வேலியின் நீளம், 4 ஆயிரத்து 756 கிலோ மீற்றராகும்.

இவ்வாறாக பெருமளவான நிதி செலவிடப்பட்டுள்ளபோதிலும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 28 நபர்களினதும், 83 யானைகளினதும் மரணங்கள் பதிவானதாக அரச கணக்குகள் பற்றிய குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.