Take a fresh look at your lifestyle.

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மில்லிமீற்றர் வரையான கடும் மழை

57

நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.