Take a fresh look at your lifestyle.

நாட்டில் நேற்றைய தினம் 60 வயதிற்கு மேற்பட்ட அறுவர் கொவிட் தொற்றால் மரணம்

42
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் நேற்று 06 மரணங்கள் பதிவாகின.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 மரணங்களில் மொத்த எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கஹவளை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையிலிருந்து, கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 18ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொவிட் நியூமோனியா நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதுஹும்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், கடந்த 17ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதய நோய், கொவிட் நியூமோனியா நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவர், நேற்றைய தினம் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

மோசமடைந்த கொவிட் நிலைமையே அவரின் மரணத்திற்கு காணரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிட்டகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயதுடைய பெண் ஒருவர், கடந்த 14ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

மோசமடைந்த கொவிட் தொற்று நிலைமையே அவரின் மரணத்திற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 18ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

மோசமடைந்த கொவிட் தொற்று, தீவிர நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர், கடந்த 10ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

மோசமடைந்த கொவிட் தொற்று நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.