Take a fresh look at your lifestyle.

முதல் தடவை தடுப்பூசி பெற்றுக்கொண்டோருக்கான முக்கிய அறிவிப்பு

68

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசி, முதலாவது தடவை செலுத்தப்பட்டவர்களுக்கு, எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் இரண்டாவது தடவை செலுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 29ஆம் திகதி, முதல் தடவை தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, ஏப்ரல் 29 ஆம் திகதி அளவில் இரண்டாவது தடவை தடுப்பூசி செலுத்தப்படும்.

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் நாடுகளுக்கு இடையில் பாரிய போட்டித்தன்மை நிலவுகிறது.

இந்த நிலையில், குறைந்தளவானோருக்கு இரண்டு முறை தடுப்பூசிகளை ஏற்றுவதனை விடவும், ஒரு முறை அதிகளவானோருக்கு தடுப்பூசியை ஏற்றுவது சிறந்தாகும் என உலக சுகாதார அமைப்பு தற்போது கூறுகின்றது.

ஏனெனில், முதலாவது முறை தடுப்பூசி ஏற்றுவதன்மூலம், தொற்றுப் பரவலானது 64 சதவீதமளவில் கட்டுப்படுத்தப்படுகின்றது என்பது உறுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனவரி 29 ஆம் திகதி முதல்முறை தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் முறை செலுத்துவதற்காக ஒரு தொகை தடுப்பூசிகளை ஒதுக்குவதற்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெறுகின்றன.

இலங்கையில், 10 முதல் 12 வாரங்களுக்கு இடையிலேயே இரண்டாம்முறை தடுப்பூசியை செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரண்டாம் கட்டமாக 5 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.