Take a fresh look at your lifestyle.

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது

68

வட்டவளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் ஒயாவிற்கு செல்லும் கிளை ஆறு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த  9 பேரை வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு இச்சம்பவம் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வட்டவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 9 பேரும் கைது செய்யப்பட்டதோடு மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுதத்ப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன், நோர்வூட் , பொகவந்தலாவ, ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என வட்டவளை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறு வட்டவளை பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.