Take a fresh look at your lifestyle.

கொழும்பில் மதிப்பீட்டு வரி செலுத்துபவர்களுக்கு சலுகை

66

2021 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபைக்கு மதிப்பீட்டு வரி செலுத்தும் போது 10 வீத கழிவு வழங்கப்பட்டிருந்தது. இந்த வழங்கப்பட்ட காலக்கெடு இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2021ஆம் ஆண்டுக்கான முழுமையான மதிப்பீட்டு வரியையும் 10 வீதக் கழிவுடன் 2021.3.31 ஆம் திகதி வரை கொழும்பு மாநகரசபைக்கு செலுத்த முடியும்.

மேலும்இ கடந்த ஜனவரி 31 ஆம் திகதியின் பின்னர் 2021 முழு ஆண்டுக்கான மதிப்பீட்டு வரியையும் இதுவரையிலும் செலுத்தியவர்களுக்கு 10 வீத கழிவு உட்படுத்தப்பட்டு அவர்களின் கணக்குகளை இற்றைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.