Take a fresh look at your lifestyle.

பெற்ற குழந்தையை புதைத்ததாக கூறப்படும் தாய் கைது

38

வவுனியா பம்பைமடுவில் தனது குழந்தையை புதைத்ததாகக் கருதப்படும் தாயொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாயான 36 வயதான பெண்ணொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார் எனவும் இவ்வாறு தனக்கு பிறந்த குழந்தையை தான் வசிக்கும் காணியில் குழிதோண்டி புதைத்துள்ளதாக விசாரணைகளில் தொியவந்துள்ளது.

இப்பெண்ணின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர் கேள்வி எழுப்பியபோது தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இப்பெண் தொடர்பில் சந்தேகம் கொண்ட ஒருவர், கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில் காவல்துறையினரின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டுள்ளது.

எனினும், தான் குழந்தையை பிரசவிக்கவில்லை என குறித்த பெண் தெரிவித்திருந்த நிலையில் அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்தபோது அவர் குழந்தையை பிரசவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் அப்பெண்ணை காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.