Take a fresh look at your lifestyle.

தந்தையை கூாிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்த மகன்

64

நாவலப்பிட்டி நவகுருந்துவத்த கெலிக்ரூப் தோட்டத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தொிவித்துள்ளனர்.

41 வயதான மகனால் 71 வயதான தந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை மதுபோதையில் இருந்தபோது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றியதில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்போது, சந்தேகநபர் கூரிய ஆயுதமொன்றினால் தனது தந்தையை தாக்கி  கொலை செய்துள்ளதாக தொியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான மகன் அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைத் தேடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.