Take a fresh look at your lifestyle.

கொரோனா தொற்றுக்குள்ளான சிலாபம் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு

73

சிலாபம், பங்தெனிய பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 15 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அயல்வீட்டை சேர்ந்த 15 பேரே இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தினூஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (27) கொரோனா தொற்றுக்கு உள்ளாக பங்கதெனிய பகுதியை சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து வருகை தந்த குறித்த பெண் டுபாயில் இருந்து வருகை தந்து தனது வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.