Take a fresh look at your lifestyle.

குடு சுரங்க கைது

60
ஹிக்கடுவ, திராணகம பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரகஹ சமில் பிரியங்க எனப்படும் குடு சுரங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் ஹிக்கடுவ பகுதியில் போதைப் பொருள் விநியோகம் செய்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.