Take a fresh look at your lifestyle.

‘பொடி லெசி’யுடன் தொடர்புடைய சகா ஒருவர் கைது

39

பாதாள உலக குழு உறுப்பினர் ´பொடி லெசி´யுடன் தொடர்புடைய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் பலபிடிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரி56 ரக துப்பாக்கி, 2 குறிபார்த்து சுடும் துப்பாக்கி, 98 ரவைகள் உள்ளிட்ட சில ஆயுதங்களும் இவருடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.