Take a fresh look at your lifestyle.

வௌிநாடுகளில் சிக்கியிருந்த 186 பேர் நாடு திரும்பினர்

46

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு நாடுகளில் சிக்கியிருந்த 186 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

மாலைத்தீவில் சிக்கி இருந்த 26 பேர் இன்று (27) பிற்பகல் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று பிற்பகல் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் சிக்கி இருந்த 160 பேர் இன்று பிற்பகல் நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.