Take a fresh look at your lifestyle.

வாழ்க்கை செலவை கட்டுப்படுத்த அமைச்சரவை உபகுழு நியமனம்

51

வாழ்க்கை செலவை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்கள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காக அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்களைப் போன்று நுகர்வோருக்கு இதன் மூலம் நிவாரணம் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

சந்தையில் நிலவும் கோரிக்கை மற்றும் விநியோக ஏற்ற இறக்கங்கள், காலநிலை தாக்கம் பருவகால உற்பத்திகள் தயாரிப்பாளர்களினால் இடம்பெறும் மாற்றம், சர்வதேச சந்தையில் விலைகள் போன்ற விடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வாழ்க்கைச் செலவை நிலையானதாக முன்னெடுப்பதற்கு தேவையான கொள்கை மற்றும் நடைமுறைத்தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையிலும் கௌரவ பிரதமர் அவர்களினதும், வர்த்தக அமைச்சர் அவர்களினதும் விவசாய அமைச்சர் அவர்களினதும் கடற்றொழில் அமைச்சர் அவர்களினதும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்களினதும் அங்கத்துவத்துடனான வாழ்க்கைச் செலவு தொடர்புடனான அமைச்சரவை துணைக்குழுவை நியமிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை வாகன மற்றும் வாகன உதிரிப்பாக இறக்குமதி வரையறை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண பெருந்தொகை பணத்தை இறக்குமதிக்காக நாம் செலவு செய்தோம், வருடாந்தம் குறைந்த தொகைக்கே நாம் ஏற்றுமதியை மேற்கொண்டிருந்தோம் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையில் சில சிரமங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ரயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இருந்த போதிலும் நாம் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவோம்.

ரூபாவின் மதிப்பை நாம் அதிகரித்துக்கொள்வதுடன் டொலரின் பெறுமதி தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவதே நாட்டிற்கு இன்று உள்ள முக்கிய தேவையாகும்.

இதனை கருத்தில் கொண்டே இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)