Take a fresh look at your lifestyle.

இந்தியா – அவுஸ்திரேலியா போட்டியில் நடனமாடிய வீரர்

39

இந்தியா -அவுஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் போது டேவிட் வார்னர் மைதானத்தில் ‘புட்ட பொம்மா’ நடனம் ஆடி வீடியோ வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வார்னர் கிரிக்கெட்டில் மட்டுமல்ல சமூக ஊடகங்களில் அவருடைய டிக்-டாக் வீடியோவுக்காகவும் பிரபலமானவர்.

வார்னர் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக இருந்து விளையாடினார். வார்னர் ஐதராபாத் அணிக்காக விளையாடியபோது, அவர் பல தெலுங்கு படங்களின் பாடல்களுக்கு டிக்-டாக் வீடியோ செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தார்.

வார்னர் தான் மட்டுமல்லாமல், தனது மனைவி, மகள்களுடனும் சேர்ந்து ஜாலியாக டிக்டாக் செய்த சில வீடியோ பதிவிட்டுள்ளார்.

அப்படி, ஏற்கெனவே, வார்னர் தனது மனைவியுடன் ஆடிய தெலுங்கு பாடலான புட்டபொம்மா டிக்-டாக் வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து நெட்டில் வைரலாக பரவியது.

இந்த நிலையில், இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் இடையே இன்று சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் குவித்தார்.

பின்னர், அவுஸ்திரேலிய அணி ஃபீல்டிங் செய்தபோது, பவுண்டரி எல்லைக் கோட்டு அருகே இருந்த வார்னர் புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.