Take a fresh look at your lifestyle.

பிரபல கால்பந்தாட்ட வீரரான மரடோனா மரணம்

55

பிரபல கால்பந்தாட்ட வீரரான மரடோனா மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

அர்ஜென்டினா கால் பந்தாட்டத்தில் உலக கிண்ணத்தினை 1986 ஆம் ஆண்டு வெல்லுவதற்கு காரணமாக இவர் இருந்துள்ளார்.

60 வயது நிரம்பிய இவர் மாரடைப்பால் இறந்துள்ளதாக அர்ஜென்டினா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மூளையில் இருந்த இரத்தக்கட்டியினை நீக்க அறுவை சிகிச்கை மேற்கொண்டு வைத்தியசாலையிலிருந்து வெளியேறி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இன்று மாரடைப்பால் அவர் இறந்துள்ளமை அவரின் ரசிகர்கள் மற்றும் அல்லாது உலக கால் பந்தாட்ட ரசிகர்களையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.