Take a fresh look at your lifestyle.

வரலாறு படைத்து வெற்றி வாகை சூடிய முப்பை இந்தியன்ஸ் அணி

64

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது.இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை தோற்கடித்து ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ராகுல் சாஹர் நீக்கப்பட்டு ஜெயந்த் ஜாதவ் சேர்க்கப்பட்டார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.

மார்கஸ் ஸ்டோய்னிஸ், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் முதல் பந்தை சந்தித்தார். டிரென்ட் போல்ட் வீசிய முதல் பந்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஸ்டோய்னிஸ் பேட்டை உரசி கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது.

இதனால் ஸ்டோய்னிஸ் கோல்டன் டக் உடன் வெளியேறினார். அடுத்து வந்த ரகானே 3-வது ஓவரின் 4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பிய தவான் ஜெயந்த் ஜாதவ் சுழலில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் டெல்லி அணி 22 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

அடுத்து கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதுவரை சரியாக விளையாடாத ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது டெல்லி அணி 15 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த ஹெட்மையர் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தாலும், டெத் ஓவரில் அதிரயாக விளையாடி முடியவில்லை.

டெல்லி 16-வது ஓவரில் 7 ரன்களும், 17-வது ஓவரில் 11 ரன்களும், 18-வது ஓவரில் 6 ரன்களும், 19-வது ஓவரில் 6 ரன்களும், கடைசி ஓவரில் 8 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களே அடித்தது.ஷ்ரேயாஸ் அய்யர் 50 பந்தில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முப்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தினை செலுத்தி வந்ததது.மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹிட் சர்மா 68 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இசான் கிர்ஸான் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார்.