Take a fresh look at your lifestyle.

மும்பை அணியுடனான பரபரப்பான போட்டியில் பஞ்சாப் அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி

49

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றுள்ளது

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மும்பாய் இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலளித்து துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப்; அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதனையடுத்து சுப்பர் ஓவர் முறையில் போட்டி இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் 2 விக்கட்டுக்களை இழந்து 5 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் 5 ஓட்டங்களைய மாத்திரமே பெற்றது.

இதனையடுத்து 2வது தடவையாக சுப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதன்போது முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சூப்பர் ஓவரில் 1 விக்கட்டை இழந்து 11 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய கிங்ஸ்லென் பஞ்சாப் அணி 15 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.