Take a fresh look at your lifestyle.

3 ஆவது ரி20 – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு

3

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு 121 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சாமிக கருணாரத்ன 24 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் போர்டின் மற்றும் ரபாடா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

121 என்ற வெற்றி இலக்கை நோக்கி தென்னாபிரிக்கா அணி இன்னும் சற்றுநேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட உள்ளது.