Take a fresh look at your lifestyle.

இருபதுக்கு20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

3

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாம் இன்று இலங்கை கிரிக்கெட் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், முக்கிய சுழற்பந்துவீச்சாளரான அகில தனஞ்ஜய நீக்கப்பட்டுள்ள அதேவேளை, அனுபவ வேகப்பந்துவீச்சாளரான நுவான் பிரதீப் 15 பேர் கொண்ட குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஏழாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது குழாமினை அறிவித்துவிட்டன.

16 அணிகள் பங்கேற்கும் குறித்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் சபை தான் இறுதியாக இன்று தங்களது குழாமை அறிவித்தது. கடந்த 10 ஆம் திகதிக்கு முன்னர், குழாமை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 19 பேர் கொண்ட குழாம் அனுப்பப்பட்டது.

இந்நிலையிலேயே தற்போது உத்தியோகபூர்வ குழாம் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் 15 பேர் கொண்ட குழாமில் இடம்பெற்றிருந்த சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்ஜய, தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியின் போது அதிக ஓட்டங்களை வாரி வழங்கியதன் காரணமாக அவர் 15 பேர் கொண்ட குழாமில் இருந்து நீக்கப்பட்டு மேலதிக வீரர்களில் ஒருவராக மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை முன்னதாக மேலதிக வீரர்களுக்கான குழாமில் இடம்பிடித்திருந்த அனுபவ வேகப்பந்துவீச்சாளரான நுவான் பிரதீப் தற்போது 15 பேர் கொண்ட குழாமில் இடம்பெற்றுள்ளார்.