Take a fresh look at your lifestyle.

தனது ஓய்வை அறிவிக்கவுள்ளாரா மெத்யூஸ்?

16

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கட் வீரர் அஞ்சலோ மெத்யூஸ் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார்.

தற்போது இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், எதிர்வரும் சில வாரங்களில் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்துக்கு மெத்யூஸ் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணிக்கு இளம் வீரர்களை உள்வாங்குவது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்து வரும் நிலையிலேயே மெத்யூஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் புதிய ஒப்பந்த புள்ளிகள் முறைமை தொடர்பாக மெத்யூஸ் உள்ளிட்ட இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் பலரும் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

பின்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர். எவ்வாறாயினும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் அவர்களுக்கு தற்போது சுற்றுப்பயண ஒப்பந்தங்களை மட்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அடுத்து இடம்பெறவுள்ள இந்தியாவுடனான தொடரில் உள்வாங்கப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் நேற்றிரவு பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு சுற்றுப்பயண ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.