Take a fresh look at your lifestyle.

பானுக்க ராஜபக்ஷவுக்கு தடை!

22

இலங்கை கிரிக்கட் அணி வீரர் பானுக்க ராஜபக்ஷவுக்கு 2 வருடங்களுக்கு பிற்போடப்பட்ட 1 வருட கிரிக்கட் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

மேலும், 5000 அமெரிக்க டொலர்களும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஊடகமொன்றுக்கு அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டிப்பட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவுக்குழுவை அவமதிக்கும் வகையில் அவர் கருத்து வெளியிட்டதன் காரணமாக அவருக்கு குறித்த கிரிக்கட் தடையை விதிப்பதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.