Take a fresh look at your lifestyle.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணம் நியூசிலாந்து வசமானது

20

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ஓட்டங்களும், நியூசிலாந்து 249 ஓட்டங்களும் எடுத்தன.

32 ஒட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ஒட்டங்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது.

புஜாரா 12 ஓட்டங்களுடனும், கோலி 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6 வது நாளான இன்று தொடர்ந்து களமிறங்கிய இந்தியா, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணித்தலைவர் கோலி 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ஓட்டங்கள், ரகானே 15 ஓட்டங்கள், ஜடேஜா 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷாப் பண்ட், 41 ஓட்டங்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் 170 ஓட்டகளில் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், ஜேமிசன் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி இரு விக்கெட்டுக்களை மாத்திரம் பறிக்கொடுத்து வெற்றியிலக்கினை அடைந்தது.

நியூசிலாந்து அணி சார்பாக அணித்தலைவர் வில்லியம்சன் 52 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.