Take a fresh look at your lifestyle.

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் இன்று ; 7 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் இந்தியா

41

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு20  போட்டிகளில் விளையாடவுள்ளது.

 

இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலிலுள்ள கவுண்டி மைதானத்தில் இன்று (16.06.2021) தொடங்குகிறது.

 

இந்திய பெண்கள் அணி 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு மிதாலி ராஜ் தலைமையில் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

 

சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் மீண்டும் கால்பதிக்கும் இந்திய அணி எவ்வாறு இதனை முகங்கொடுக்கப்போகிறது என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

 

இந்தியா-இங்கிலாந்து பெண் அணிகள் இதுவரை 13 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 2 இல் இ்ந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி கண்டுள்ளன.

 

10 ஆட்டங்கள் சமநிலையில் முடிந்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக இந்திய பெண்கள் அணி இதுவரை டெஸ்டில் தோற்றது கிடையாது. 8 ஆட்டங்களில் விளையாடி 2 இல் வெற்றியும், 6 போட்டியினை சமநிலையில் முடித்துள்ளது.

 

அதே சமயம் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

எனவே இந்த டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.