Take a fresh look at your lifestyle.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தினை பிடித்த நியூசிலாந்து

25

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் போட்டியினை சமநிலை முடித்த நியூசிலாந்து அணி, பர்மிங்காமில் நடந்த 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி (123 புள்ளிகள்) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியினை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது.

இந்திய அணி (121 புள்ளிகள்) முதலிடத்தில் இருந்து 2 ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. அவுஸ்ரேலியா 108 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும், இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 94 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலுமுள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணி (84 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்கா அணி (80 புள்ளிகள்), இலங்கை அணி (78 புள்ளிகள்), பங்களாதேஷ் அணி (46 புள்ளிகள்), ஜிம்பாப்வே அணி (35 புள்ளிகள்) முறையே 6 முதல் 10 இடங்களை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.