Take a fresh look at your lifestyle.

இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை விஜயம்

26

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகப்பூர்வமாக இன்று (10) அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் 28ம் திகதி நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

சுதந்திர கிண்ண கிரிக்கெட் தொடருக்காகவே, இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்றது.

மூன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், மூன்று இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய – இலங்கை அணிகள் மோதவுள்ளன.

கொழும்பு பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் 13ம் திகதி நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஜுலை மாதம் 16ம் திகதியும், இறுதி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஜுலை மாதம் 18ம் திகதியும் நடைபெறவுள்ளன.

அதன்பின்னர், ஜுலை மாதம் 21, 23 மற்றும் 25ம் திகதிகளில் கொழும்பு பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் இரவு போட்டியாக நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், 26ம் திகதி இந்திய அணி, இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து, இந்தியா நோக்கி புறப்படவுள்ளது