Take a fresh look at your lifestyle.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு: சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்

23

மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிராவோவிற்கு ஒய்வு அளிக்கப்பட்டு, லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹர்பஜன் சிங், ஷாகிப் அல் ஹசன் நீக்கப்பட்டு நாகர்கோடி, சுனில் நரைன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

1. ருத்துராஜ் கெய்க்வாட், 2. டு பிளிஸ்சிஸ், 3. மொயீன் அலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. அம்பதி ராயுடு, 6. ஜடேஜா, 7. எம்எஸ் டோனி, 8. சாம் கர்ரன், 9. ஷர்துல் தாகூர், 10. லுங்கி நிகிடி, 11. தீபக் சாஹர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

1. நிதிஷ் ராணா, 2. ஷுப்மான் கில், 3. ராகுல் திரிபாதி, 4. மோர்கன், 5. தினேஷ் கார்த்திக், 6. சுனில் நரைன், 7. அந்த்ரே ரஸல், 8. பேட் கம்மின்ஸ், 9. நாகர்கோடி, 10. வருண் சக்ரவர்த்தி, 11. பிரசித் கிருஷ்ணா.