Take a fresh look at your lifestyle.

150 ஓட்டங்களுக்கு கீழ் எடுத்தால் தோல்வி ; 26 ஆவது தடவை தோல்வியுற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்

46

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி்ன.

இதற்கான நாணயசூழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதற்கமைய முதலில் துடுப்பாட்டத்திற்காக களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் ஆரம்ப முதலே தடுமாறியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிக்கொடுத்து 147 ஓட்டங்கள் பெற்றது. துடுப்பாட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பாக ரிஷாப் பண்ட் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தார்.

148 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் ஆரம்ப துடுப்பாட வரிசையில் ஐந்து பேருமே ஏமாற்றத்தினை தந்தனர்.

எட்டாவது ஓவரில் 42 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை பறிக்கொடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சில் திணறினர்.

ஐபிஎல் வரலாற்றில் 150 ஓட்டங்களுக்கு கீழ் பெற்ற 25 போட்டிகளிலும் தோல்வியினை தழுவியிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வரலாற்றினை மாற்றியமைத்து வெற்றி வாகையினை சூடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றத்தினை கொடுத்தது.

மில்லர் மற்றும் கிறிஸ் மோரிஸ் அவர்களின் அதிரடி ஆட்டத்தில் 3 விக்கெட்டுக்கள் மற்றும் 2 பந்துகள் மீதம் வைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினை வெற்றியடைய செய்தனர்.

இப்போட்டியில், முதல் இன்னிங்க்ஸில் ஒரு ஆறு ஓட்டங்களே இல்லாமல் முடிந்த இன்னிங்க்ஸ் ஆக வாரலாற்றில் பதிவாகியிருந்த நிலையில், போட்டியில் 33 ஓவர்கள் வரை ஆறு ஓட்டங்களே இல்லாமல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.