Take a fresh look at your lifestyle.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 148 வெற்றியிலக்கு

37

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான நாணயசூழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதற்கமைய முதலில் துடுப்பாட்டத்திற்காக களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் ஆரம்ப முதலே தடுமாறியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிக்கொடுத்து 147 ஓட்டங்கள் பெற்றது. துடுப்பாட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பாக ரிஷாப் பண்ட் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 148 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.