Take a fresh look at your lifestyle.

இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள்

43

இந்தியாவில் இடம்பெற்றுவருகின்ற ஜாம்பவான்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான்கள் மோதும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை கிரி்க்கெட் ஜாம்பவான்கள் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தனர்.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 125 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிக்கொடுத்தது.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் நுவான் குலசேகர 4 ஓவர்களுக்கு 25 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தார். தென்னாபிரிக்கா அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மோர்ன் வான் வைக் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

126 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் பறிக்கொடுத்து தமது வெற்றியினை பதிவு செய்தது.

இலங்கை அணிச்சார்பாக துடுப்பாட்டத்தில் சிந்தக ஜெயசிங்க 47 ஓட்டங்களையும் உபுல் தரங்க 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகர தெரிவு செய்யப்பட்டார்.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (21.03.2021) அன்று நடைப்பெறவுள்ள இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பாவன்களை, இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் எதிர்க்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.