Take a fresh look at your lifestyle.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான்கள் மோதும் அரையிறுதி போட்டி – நேரலை

72

இந்தியாவில் இடம்பெற்றுவருகின்ற ஜாம்பவான்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான்கள் மோதும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை கிரி்க்கெட் ஜாம்பவான்கள் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தனர்.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான்கள் 10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுக்களை பறிக்கொடுத்து 67 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடும் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் 12 ஓட்டங்களில் மேற்கிந்தியத்தீவுகளை வெற்றிக்கொண்ட இந்திய அணி இறுதிசுற்றுக்கு தெரிவாகியுள்ளது.